Monday, April 27, 2015

4. ஸ்லோகம் நான்கு – ஸ்தித ப்ரக்ஞத்வம்



Thirst, disease and the rest should be attended.
 One should partake whatever one gets each day as food as if it is medicine. Delicious food should not be sought for.
One should be satisfied with whatever is ordained.
 One should endure the duality of heat and the cold.
One should not engage in unproductive discussion.
Impassioned dis-interest towards samsara should be cultivated.
Unnecessary sympathy of people should be avoided.
 
_____________________
 
உன்னுடலைக் கோயிலென்று ணர்ந்து-நீ பிழைத்திடு
உண்ணும்-உணவு இறைவன்-என்று எண்ணி-நீயும் உண்டிடு
அந்த-உணவில் சுவையை-மட்டும் நினைத்தல்-சிறுமை என்றிரு
கிடைக்கும்-எதையும் இறைவன்-அருளே என்று-நீயும் ஏற்றிடு
குளிரும்-சூடும் ஒன்று-என்று என்னும்-எண்ணம் வளர்த்திடு
பயனிலாத பேச்சில்-காலம் செலவழித்தல் ஒழித்திடு
மாய-வாழ்வில் ஆர்வம்-தன்னைக் குறைத்து-நீயும் இருந்திடு
_______________
 

 

4.1   உன்னுடலைக் கோயிலென்று ணர்ந்து-நீ பிழைத்திடு

உன்னுடலைக் கோயிலென்று ணர்ந்து-நீ பிழைத்திடு
உடல்வருத்தும் விரதம்-யாவும் பலனளிக்கா தறிந்திடு
விரதப்-பூஜை யாக-யோகம்  யாவும்-உடலும் பண்பட
உதவ-என்று அறிந்திடு வருத்த-அல்ல புரிந்திடு
நோயில்-படுத்து பாயில்-விழுந்த உடலும்-பக்தி பண்ணுமா
வாயில்-அரிசி போடும்-நிலையில் பூஜை-செய்யத் தோன்றுமா
உடலை-வருத்தும் விரத-பூஜை மனதை-அடக்க இல்லையேல்
கடலைக்-கடக்க இலையில்-படகைச் செய்தல்-போல அறிந்திடு
உணவை-நீயும் கொள்ளணும் ஆனால்-மிதமாய் உண்ணனும்
உதட்டில்-சிரிப்பு தவழணும் பேச்சு-மிதமாய் இருக்கணும்
உனது-நெஞ்சம் உண்மை-உணர ஆயத்தமாய் இருக்கணும்
வேதம்-முதல் கீதை-வரை சொன்னதிது அறியணும்

4.2   உண்ணும்-உணவு இறைவன்-என்று எண்ணி-நீயும் உண்டிடு

உண்ணும்-உணவு இறைவன்-என்று எண்ணி-நீயும் உண்டிடு
அன்னம்-பரமன் என்ற-வேத வாக்கை-நினைத்து வழிபடு
எண்ணம்-அன்னம் தொட்டு-அமையும் என்பதனை நினைவுறு
கண்ணன்-கீதை சொல்லும்-இதனை திண்ணம்-என்று நம்பிடு
 


4.3   அந்த-உணவில் சுவையை-மட்டும் நினைத்தல்-சிறுமை என்றிரு

அந்த-உணவில் சுவையை-மட்டும் நினைத்தல்-சிறுமை என்றிரு
விரதம்-உணவை மறுத்தல்-அல்ல உணவின்-சுவையை துறத்தலே
சிறிதும்-உணவில் ஆசை-தன்னை விட்டு-நீயும் வாழ்ந்திரு
அரிய-உடலை உணர்வை-அறிய ஏதுவாகப் பழக்கிடு
உணவை-உண்மை உணர்வை-அளிக்க உதவுமாறு ஏற்றிடு
உடலை-அல்ல உணர்வு-வளர்க்க மருந்து-உணவு என்றிரு

4.4   கிடைக்கும்-எதையும் இறைவன்-அருளே என்று-நீயும் ஏற்றிடு

 கிடைக்கும்-எதையும் இறைவன்-அருளே என்று-நீயும் ஏற்றிடு
படைத்த-அவனே கொடுத்தருள்வான் என்று-நீ அறிந்திடு
நடிக்க-வந்த உனது-பங்கு என்னவென்று உணர்ந்திரு
உனக்குப்-பிடிக்கும் என்றிலாமல் கிடைத்த-ஒன்றைப் பிடித்திரு
 

4.5 குளிரும்-சூடும் ஒன்று-என்று என்னும்-எண்ணம் வளர்த்திடு

குளிரும்-சூடும் ஒன்று-என்று என்னும்-எண்ணம் வளர்த்திடு
ஒன்றுக்-கொன்று முரண்டிடுத்தல் உண்மை-அல்ல புரிந்திடு
நன்று-நன்று எதுவும்-நன்று என்று-நீயும் இருந்திடு
சென்று-தோன்றும் எதுவும்-மாயை என்று-நீயும் அமைந்திரு
வேதப்-புருஷ சுக்தம்-கீதை மற்றும்-வேத உருத்திரம்
ஆன-யாவும் இறைவன்-தன்மை என்னவென்று கூறுது
அவைகள்-யாவும் ஒன்றுக்கொன்று முரண்-எனநீ காண்பது
உண்மை-அல்ல உந்தன்-அறி..யாமை-செய்யும் குறும்பது

4.6   பயனிலாத பேச்சில்-காலம் செலவழித்தல் ஒழித்திடு

பயனிலாத பேச்சில்-காலம் செலவழித்தல் ஒழித்திடு
பேசிப்-பேசி உனது-திறனை குறைத்தலை-நீ விடுத்திடு
*வாசித்துமா காது-மூச்சு யோசித்து-நீ பேசிடு 
**வாசித்துவம் உணர-நீயும் இறைவனுடன் பேசிடு
*எட்டுச் சுரையால் (வாசித்தலால்) உன் மூச்சடங்காது (மூச்சடங்கி மனமடங்காது, தியானம் கூடாது). எனவே வாசித்ததைப் பேசிபேசி என்ன பயன். வாசித்ததை யோசி யோசி என்றே பொருள்.
**வாசித்துவம்=ஸ்வரூபம் (Reality)
 
4.7   மாய-வாழ்வில் ஆர்வம்-தன்னைக் குறைத்து-நீயும் இருந்திடு
மாய-வாழ்வில் ஆர்வம்-தன்னைக் குறைத்து-நீயும் இருந்திடு
அதனில்-சாரம் இல்லை-என்ற உண்மை-தன்னை உணர்ந்திடு
உலக-அறிவில் கர்வம்-கொண்டு இருத்தல்-தன்னைத் தவிர்த்திடு
உப்பு-சப்பு அற்ற-பட்டம் பதவி-மோகம் விடுத்திரு
 ஆர்வமின்மை என்று-சொல்லல் துறவு-என்றே ஆகுது
அந்த-துறவு செயலின்-துறவு அல்ல-என்று புரிந்திடு
கருமத்-துறவு துறவு-அல்ல பலனில்-கொண்ட பற்றையே   
துரத்தல்-ஒன்றே உண்மைத்-துறவு என்ற-உண்மை உணர்ந்திடு

4.8   பிறரின்-நோக்கில் தென்படாமல் தனித்திருந்தே வாழ்ந்திடு

பிறரின்-நோக்கில் தென்படாமல் தனித்திருந்தே வாழ்ந்திடு
பிறரின்-புகழ்ச்சிக் கடிமையாகி மயங்கிடாமல் பிழைத்திரு
உலகில்-இருந்து உலகை-மறந்து உண்மை-உணர முயன்றிடு
உலகம்-உன்னில் இருக்குதென்ற உண்மை-உணரச் செயல்படு
 
_____________________


Prev    First     Next

 

No comments:

Post a Comment