Wednesday, April 29, 2015

முடிவிலா முடிவு ...!



தானாய்த் தோன்றித் தானே-நான் என்றுமாகி

வானாய் தீயாய் நீராய் நிலமுமாகிக்

காற்றாய் மூச்சாய் ஊனாய் உடலுமாகி

பேச்சாய் பேச்சால் விளக்கொணா அருளுமாகி

வந்தான் நின்றான் கிடந்தான் அவனை-நாடி

எந்தாய் எந்தாய் என்று-நீ தேடி-ஓடி

செல்லாய் ஒன்றாய் சேர்வாய் கலந்து-ஊடி..!

__________________

  First 

Monday, April 27, 2015

5. ஸ்லோகம் ஐந்து - முமுக்ஷுத்வம்



One should cherish satisfaction in solitude.
One should seek fulfillment in transcendental state of Mind.
One should perceive the entirety of the subtle Self.
This world is to be perceived as His reflection.
Consolidated effect of the earlier Actions should be terminated.
 With intelligent resolve, one should free oneself from the effect of subsequent actions.
The consequence of earlier actions should be terminated conclusively.
In this manner one should establish one’s self in Supreme Brahman.
___________



தனிமை-என்ற தன்னுணர்வை அனுபவிக்கப் பழகிடு
மெய்-கடந்த மெய்யுணர்வை மெய்யைக்-கொண்டு அடைந்திடு
உலகிலுள்ள துன்னிலுள்ள தென்று-நீ அறிந்திடு
பூத-உலகப் பரமனின் ப்ரதிபலிப்பாய் உணர்ந்திடு
முன்னின்-வினை முழுதையும்-நீ கழுவக்-கணமும் முயன்றிடு
வினை-கழிய உனது-புத்தி தன்னைக் கொண்டு உழைத்திடு
பற்றிலாதான் பற்றினை-நீ பற்று-விட பற்றிறு
இப்படியாய்ச் சாதனையைப் புரிந்து-நீயும் வாழ்ந்திடு
_____________

5.1   தனிமை-என்ற தன்னுணர்வை அனுபவிக்கப் பழகிடு

தனிமை-என்ப தென்னவென்று அனுபவித்துப் புரிந்திடு
தனிமை-நாட்டை விட்டு-காட்டில் இருப்பதல்ல அறிந்திடு
பலரின்-இடையில் கிடைக்கும்-தனிமை தன்னை-அடைய முயன்றிடு
எண்ணம்-கூட விடுத்து உன்னில்  இருத்தல் தனிமை உணர்ந்திடு

5.2   மெய்-கடந்த மெய்யுணர்வை மெய்யைக்-கொண்டு அடைந்திடு

 மெய்-கடந்த மெய்யுணர்வை மெய்யைக்-கொண்டு அடைந்திடு
மெய்யதொன்றே திருப்தி-அளிக்கும் என்ற-உண்மை உணர்ந்திடு
மெய்மை-நின்ற மனதில்-தெய்வம் நின்று-வழியைக் கொடுக்குது
மெய்-மறக்க மெய்மை-வந்து மாயத்-திரையை விலக்குது

தெரியும்நிலையில் இருக்குமுனக்குள் *துரிய-மெய்யொன் றிருக்குது
 அறிவினாலே அதனை-அறிய முடியாமலே போகுது
இறைவன்-துணையை வேண்டி-முயல மெல்லத்-திரையும் விலகுது
சிறையில்-உள்ள ஆன்ம-ரூபம் உடலுமல்ல விளங்குது
*Astral/Spiritual body

5.3 உலகிலுள்ள துன்னிலுள்ள தென்று-நீ அறிந்திடு

உலகிலுள்ள துன்னிலுள்ள தென்று-நீ அறிந்திடு
மனத்திலல்ல சிதத்திலல்ல  அதனின்-ஆட்சி நடப்பது
எண்ணமல்ல அறிவு-அல்ல அதற்குத் துணை-நிற்பது
திண்ணமன்ன சாட்சியாக நிற்குமாத்து..மம்-அது
ஆத்துமம்-உன்.. னில்-அமைதி கொண்டு-சாட்சி பூதமாய்
வேறிலா லயம்-தனில் நிலைத்து-தா..னிருக்குது
ஒன்றிடா தலைமனம் தனைப்-பிடித்து எப்படி
ஆத்ம-நுண்ணி..யத்தை-அறிதல் யோசித்திடாய் தினப்படி
இந்த-எண்ணம் தோன்ற-அலையும் மனது-நினைக்கும் நிலைத்திட
வந்த-சாந்தி கொண்டு-தியானம் தன்னில்-மூழ்க முயன்றிடு
பந்தமின்றி வந்த-விடத்தை யோசி-நீயும் யோசி-நீ
அந்த-விடத்தைக் கொண்ட-யோகி ஈசன்-பாதம் யாசி-நீ
அலை-மனம் பிடித்து-நீ யோகம்-என்ற சாதனை
வலைபடுத்தி அதனை-நீ தெளிய-வைக்க முயன்றிடு
உளிக்கரத்தில் கல்லுமோர் சிலையுமாக ஆகுது
நிலைப்படுத்த மனமுமோர் தெள்ளிய-நீர் ஆகுது

தெளிந்தநீரில் துல்லியக் காட்சியாகும் பிம்பமாய்
கனிந்தநெஞ்சின் மென்மையில் மலர்ச்சியாகும் பாசமாய்
விளங்குமந்த நுண்ணிய சாட்சியாகும் ஆத்துமா
துலங்குமிடம் யோகியர் தூய்மையான நெஞ்சமாம்..!
-பதஞ்சலி யோக சூத்திரம்
"ததா த்ரஷ்டு : ஸ்வரூபேஸ வஸ்தானாம் ||”

 5.4   பூத-உலகைப் பரமனின் ப்ரதிபலிப்பாய் உணர்ந்திடு

பூத-உலகைப் பரமனின் ப்ரதிபலிப்பாய் உணர்ந்திடு
பரமனன்றி உலகில்-வேறு ஒன்றுமில்லை என்பது
உனது-சித்தில் பசுமரத்தில் ஆணி-போல அடித்திடு
முயன்று-கரைக்க கல்லும்-கரையும் என்ற-உண்மை நினைத்திரு
 

5.5   முன்னின்-வினை முழுதையும்-நீ கழுவக்-கணமும் முயன்றிடு 

முன்னின்-வினை முழுதையும்-நீ கழுவக்-கணமும் முயன்றிடு
எண்ணிலடங்காத அதை எண்ணிடாமல் கொடுத்திடு
என்னதல்ல உன்னதினி என்று-அவனை இழுத்திடு
செய்யும்-கருமப் பலனும்-எனக்கு இல்லை-உனக்கு என்றிடு
செஞ்சதெல்லாம் போகட்டுமே என்று-அவனுக்..குரைத்திடு
கொஞ்சமேனும் சாதனையைச் செய்து-நீயும் காட்டிடு
அதனைக்-கொண்டு புதுக்-கணக்கு ஒன்றை-விரைந்து தொடங்கிடு
யமனை-வெல்லும் வேலை-தன்னை அவனுக்கு-நீ அளித்திடு
கொஞ்சமும்-நீ தளராமல் கெஞ்சி-அவனை அழைத்திடு
கெஞ்சியுமவன் மசியவில்லை என்னில்-கொஞ்சிக் கூப்பிடு
கொஞ்சிக்-கூட வரலை-என்றால் மிரட்டி-அவனைக் கூப்பிடு
அஞ்சிடாதே அவனின்-நிகர் நீஎனச்-ச..வால்விடு


5.6   வினை-கழிய உனது-புத்தி தன்னைக் கொண்டு உழைத்திடு

வினை-கழிய உனது-புத்தி தன்னைக் கொண்டு உழைத்திடு
உந்தன்-மதியைக் கொண்டு-மனதின் எண்ணங்களைப் பார்த்திரு
அவற்றை-விட  அவற்றை-விட உன்னதத்தைப் பற்றிடு
அதன்-பிறகு யாதுமவன் செயல்-எனவே கண்டிரு

5.7   பற்றிலாதான் பற்றினை-நீ பற்று-விட பற்றிறு

பற்றிலாதான் பற்றினை-நீ பற்று-விட பற்றிறு
முற்றும்-உந்தன் வினை-விலகச் சாதனையில் முயன்றிடு
கரும-வினையைப் புரியும்-கடமை மட்டும்-தானே என்னது
அதற்குப்-பலனை அளிக்க-வேண்டாம் இனிமேல்-அதுவும் உன்னது
என்று- சொல்லி இறைவன்-தாளில் அர்ப்பணித்து-விட்டிடு   
வருவதனை அவன்-அருளாய் ஏற்று-நீயும் வாழ்ந்திரு
பொறுமைதனை பெருமையாகக் கொண்டு-நீயும் இருந்திடு
எருமை-தனில் வரும்-யமனின் பயம்-விலகிடக் காத்திரு  
5.8   இப்படியாய்ச் சாதனை தனைப்-புரிந்து வாழ்ந்திரு
இப்படியாய்ச் சாதனை தனைப்-புரிந்து வாழ்ந்திரு
மாய-வாழ்க்கைக் கடலில்-கரையைக் காணும்வரையில் உழைத்திரு
ஓய்வு-இல்லை ஒழிவு-தொல்லை என்று-அவனில் இருந்திடு
மாயமாகி மாயம்-செய்யும் அவன்-தெரிவான் காத்திரு
அருகணைப்பான் காத்திரு ஒருங்கிணைப்பான் பொறுத்திரு
அவன்-அளிப்பான் பேறது அவன்-நீதான் என்பது …..!
__________

                  Prev     First   Next             

4. ஸ்லோகம் நான்கு – ஸ்தித ப்ரக்ஞத்வம்



Thirst, disease and the rest should be attended.
 One should partake whatever one gets each day as food as if it is medicine. Delicious food should not be sought for.
One should be satisfied with whatever is ordained.
 One should endure the duality of heat and the cold.
One should not engage in unproductive discussion.
Impassioned dis-interest towards samsara should be cultivated.
Unnecessary sympathy of people should be avoided.
 
_____________________
 
உன்னுடலைக் கோயிலென்று ணர்ந்து-நீ பிழைத்திடு
உண்ணும்-உணவு இறைவன்-என்று எண்ணி-நீயும் உண்டிடு
அந்த-உணவில் சுவையை-மட்டும் நினைத்தல்-சிறுமை என்றிரு
கிடைக்கும்-எதையும் இறைவன்-அருளே என்று-நீயும் ஏற்றிடு
குளிரும்-சூடும் ஒன்று-என்று என்னும்-எண்ணம் வளர்த்திடு
பயனிலாத பேச்சில்-காலம் செலவழித்தல் ஒழித்திடு
மாய-வாழ்வில் ஆர்வம்-தன்னைக் குறைத்து-நீயும் இருந்திடு
_______________
 

 

4.1   உன்னுடலைக் கோயிலென்று ணர்ந்து-நீ பிழைத்திடு

உன்னுடலைக் கோயிலென்று ணர்ந்து-நீ பிழைத்திடு
உடல்வருத்தும் விரதம்-யாவும் பலனளிக்கா தறிந்திடு
விரதப்-பூஜை யாக-யோகம்  யாவும்-உடலும் பண்பட
உதவ-என்று அறிந்திடு வருத்த-அல்ல புரிந்திடு
நோயில்-படுத்து பாயில்-விழுந்த உடலும்-பக்தி பண்ணுமா
வாயில்-அரிசி போடும்-நிலையில் பூஜை-செய்யத் தோன்றுமா
உடலை-வருத்தும் விரத-பூஜை மனதை-அடக்க இல்லையேல்
கடலைக்-கடக்க இலையில்-படகைச் செய்தல்-போல அறிந்திடு
உணவை-நீயும் கொள்ளணும் ஆனால்-மிதமாய் உண்ணனும்
உதட்டில்-சிரிப்பு தவழணும் பேச்சு-மிதமாய் இருக்கணும்
உனது-நெஞ்சம் உண்மை-உணர ஆயத்தமாய் இருக்கணும்
வேதம்-முதல் கீதை-வரை சொன்னதிது அறியணும்

4.2   உண்ணும்-உணவு இறைவன்-என்று எண்ணி-நீயும் உண்டிடு

உண்ணும்-உணவு இறைவன்-என்று எண்ணி-நீயும் உண்டிடு
அன்னம்-பரமன் என்ற-வேத வாக்கை-நினைத்து வழிபடு
எண்ணம்-அன்னம் தொட்டு-அமையும் என்பதனை நினைவுறு
கண்ணன்-கீதை சொல்லும்-இதனை திண்ணம்-என்று நம்பிடு
 


4.3   அந்த-உணவில் சுவையை-மட்டும் நினைத்தல்-சிறுமை என்றிரு

அந்த-உணவில் சுவையை-மட்டும் நினைத்தல்-சிறுமை என்றிரு
விரதம்-உணவை மறுத்தல்-அல்ல உணவின்-சுவையை துறத்தலே
சிறிதும்-உணவில் ஆசை-தன்னை விட்டு-நீயும் வாழ்ந்திரு
அரிய-உடலை உணர்வை-அறிய ஏதுவாகப் பழக்கிடு
உணவை-உண்மை உணர்வை-அளிக்க உதவுமாறு ஏற்றிடு
உடலை-அல்ல உணர்வு-வளர்க்க மருந்து-உணவு என்றிரு

4.4   கிடைக்கும்-எதையும் இறைவன்-அருளே என்று-நீயும் ஏற்றிடு

 கிடைக்கும்-எதையும் இறைவன்-அருளே என்று-நீயும் ஏற்றிடு
படைத்த-அவனே கொடுத்தருள்வான் என்று-நீ அறிந்திடு
நடிக்க-வந்த உனது-பங்கு என்னவென்று உணர்ந்திரு
உனக்குப்-பிடிக்கும் என்றிலாமல் கிடைத்த-ஒன்றைப் பிடித்திரு
 

4.5 குளிரும்-சூடும் ஒன்று-என்று என்னும்-எண்ணம் வளர்த்திடு

குளிரும்-சூடும் ஒன்று-என்று என்னும்-எண்ணம் வளர்த்திடு
ஒன்றுக்-கொன்று முரண்டிடுத்தல் உண்மை-அல்ல புரிந்திடு
நன்று-நன்று எதுவும்-நன்று என்று-நீயும் இருந்திடு
சென்று-தோன்றும் எதுவும்-மாயை என்று-நீயும் அமைந்திரு
வேதப்-புருஷ சுக்தம்-கீதை மற்றும்-வேத உருத்திரம்
ஆன-யாவும் இறைவன்-தன்மை என்னவென்று கூறுது
அவைகள்-யாவும் ஒன்றுக்கொன்று முரண்-எனநீ காண்பது
உண்மை-அல்ல உந்தன்-அறி..யாமை-செய்யும் குறும்பது

4.6   பயனிலாத பேச்சில்-காலம் செலவழித்தல் ஒழித்திடு

பயனிலாத பேச்சில்-காலம் செலவழித்தல் ஒழித்திடு
பேசிப்-பேசி உனது-திறனை குறைத்தலை-நீ விடுத்திடு
*வாசித்துமா காது-மூச்சு யோசித்து-நீ பேசிடு 
**வாசித்துவம் உணர-நீயும் இறைவனுடன் பேசிடு
*எட்டுச் சுரையால் (வாசித்தலால்) உன் மூச்சடங்காது (மூச்சடங்கி மனமடங்காது, தியானம் கூடாது). எனவே வாசித்ததைப் பேசிபேசி என்ன பயன். வாசித்ததை யோசி யோசி என்றே பொருள்.
**வாசித்துவம்=ஸ்வரூபம் (Reality)
 
4.7   மாய-வாழ்வில் ஆர்வம்-தன்னைக் குறைத்து-நீயும் இருந்திடு
மாய-வாழ்வில் ஆர்வம்-தன்னைக் குறைத்து-நீயும் இருந்திடு
அதனில்-சாரம் இல்லை-என்ற உண்மை-தன்னை உணர்ந்திடு
உலக-அறிவில் கர்வம்-கொண்டு இருத்தல்-தன்னைத் தவிர்த்திடு
உப்பு-சப்பு அற்ற-பட்டம் பதவி-மோகம் விடுத்திரு
 ஆர்வமின்மை என்று-சொல்லல் துறவு-என்றே ஆகுது
அந்த-துறவு செயலின்-துறவு அல்ல-என்று புரிந்திடு
கருமத்-துறவு துறவு-அல்ல பலனில்-கொண்ட பற்றையே   
துரத்தல்-ஒன்றே உண்மைத்-துறவு என்ற-உண்மை உணர்ந்திடு

4.8   பிறரின்-நோக்கில் தென்படாமல் தனித்திருந்தே வாழ்ந்திடு

பிறரின்-நோக்கில் தென்படாமல் தனித்திருந்தே வாழ்ந்திடு
பிறரின்-புகழ்ச்சிக் கடிமையாகி மயங்கிடாமல் பிழைத்திரு
உலகில்-இருந்து உலகை-மறந்து உண்மை-உணர முயன்றிடு
உலகம்-உன்னில் இருக்குதென்ற உண்மை-உணரச் செயல்படு
 
_____________________


Prev    First     Next

 

3. ஸ்லோகம் மூன்று - வேத (அ)த்யாயனம்






Meaning of the Supreme Statement should be reflected upon.
One should take shelter under scriptural statements.
One should remain aloof from perverse arguments.
One should be receptive to scriptures, clarifications and debates.
‘I am Brahman’ – thus one thought should be fully experienced.
One should give up constant and continuous ego-sense.
One should discard the idea that ‘I am the body’.
Contentious arguments with men of Wisdom should be avoided.
________________
 
 
பிறகு-ஞானம் தோன்ற-வேத வாக்கியத்தை நினைத்திடு

 நாலு-வேதத் தருவின்-நிழலில் அமர்ந்து-அதனை வழிபடு

 போதும்-எந்தன் வாதப்-பித்து என்று-நன்றாய் முடிவெடு

 வேதம்-சொல்லும் ஞானம்-பெறும் யோக்கியத்தை வளர்த்திடு

 உண்மை-உணர உன்னை-மறந்து உண்மையோடு கலந்திடு

 தன்மையற்ற தன்மைத்தான தன்மை-தன்மை துறந்திரு

 உன்னை-உடலென் றெண்ணும்-எண்ணம் தன்னை-நீ துறந்திடு

 சாதனையில் ஞானியர்பால் வாக்கு-வாதம் விடுத்திடு
___________________


3.1   பிறகு-ஞானம் தோன்ற-வேத  வாக்கியத்தை நினைத்திடு

பிறகு-ஞானம் தோன்ற-வேத வாக்கியத்தை நினைத்திடு
நினைத்த-அதனை நினைத்து-அதனின் பெருமை உணர-முயன்றிடு
உணர்ந்த-அதனை உணர்ந்த-பிறகு உருகி-அதனில் கரைந்திடு
கரைந்த-பிறகு அதுவும்-நீயும் ஒன்றெனவே-அறிந்திடு


ஞானம்-கொண்டு மாற்றம்-அடைதல் ஞானம்-அல்ல புரிந்திடு
உணர்ந்தநிலை தன்னில்-இருத்தல் ஞானம்-என்று புரிந்திடு
உண்மைப்-பொருளின் அறிவு உண்மை ஆதலல்ல உணர்ந்திடு
நன்மை-சேர்க்கும் அந்த-அறிவு உதவ-என்றே அறிந்திடு
 
·        Awareness is not a state of becoming, but of being, needing knowledge as a guide, wisdom being the culmination.Sankara cautions us not to be tranquilized by the rhythmic sound of manthra, but reflect on them after understanding the meaning.

For example reciting of Vedham after knowing the chanting of matras rythmatically is not enough.. in fact, Sankara cautions that being a tranquilizer. We need to transcend it and reflect on the meaning of scriptures and meditate on the meaning of the maha-vakyas like

Aham Brahmaasmi, So-hum, …etc.

 


3.2  நாலு-வேதத் தருவின்-நிழலில் அமர்ந்து-அதனை வழிபடு



நாலு-வேதத் தருவின்-நிழலில் அமர்ந்து-அதனை *வழிபடு
பாலில்-இருக்கும் நீரைப்-பிரிக்கும் அன்னம்-போல உண்மையை
பிரித்து-எடுக்கும் திறமை-தன்னை அடைய-நீயும் முயன்றிடு
வேதம்-உனக்கு பாதை-காட்டும் அதனை-உணர முயன்றிடு

*வழிபாடு என்பது எந்திரத்தனமாகச் செய்யும்  யாகம் பூஜை என்பன அல்ல. அவைகளை எதற்குப் புரிகிறோம் என்ற உணர்வினில் செயல்படுதலே ஆகும். வேதப் பொருள் உணர அதனை த்யானித்து முயல்வதே வழி பாடு ஆகும். வேத கோஷமோ, மந்த்ர தந்த்ரமோ அல்ல. இவை எல்லாம் தேவை இல்லை எனும் பொருள் கொள்ளற்க. இவை எல்லாம் என்ன , எது வரை என்று உணர்க என்பதே மேற் கூறியவற்றின் நோக்கம்.

பாதை-தன்னைப் பார்த்துப்-பார்த்து நிற்றல்- ஊரில் சேர்க்குமோ
பாதை-தன்னில் காலெடுத்து நடந்து-செல்லல் வேண்டுமாம்
வேதம்-கற்றல் வேதம்-ஓதல் என்பதெல்லாம் இறைவனை
அடையும்-வழியைக் காட்டி-நிற்கும் எனினும்-அதனின் உட்பொருள்
 தன்னை-உணர்தல் வேண்டும்-என்ற முயற்சி-உனக்கு வேணுமாம்
 பின்னர்-வேதம் ஓதல்-என்ப தென்ன-வென்று விளங்குமாம்
 

  3.3 போதும்-எந்தன் வாதப்-பித்து என்று-நன்றாய் முடிவெடு


போதும்-எந்தன் வாதப்-பித்து என்று-நன்றாய் முடிவெடு
நாளும்-இரவும் த்யானம்-செய்து ரிஷிகள்- கண்டு சொன்னது
ஒன்றுக்கொன்று முரண்வது-போல் உனக்குத்-தோற்றம் அளிப்பது
உந்தன்-குறை என்பதை-நீ அறிந்து-நன்றாய் முயன்றிடு
 
ரிஷிகள்-என்றும் தன்னறிவை நம்பி-இல்லை உணர்ந்திடு
விஷய-ஞானம் போன்றதில்லை அவர்கள்-தன்னின் கூற்றது
தெளிந்த-நெஞ்சில் ஸ்புரித்ததனை அவர்கள்-சொல்லில் சொன்னது
இறைவன்-தன்னின் வாய்-மொழியே என்று-நம்பி செயல்படு
 

 3.4 வேதம்-சொல்லும் ஞானம்-பெறும் யோக்கியத்தை வளர்த்திடு

வேதம்-சொல்லும் ஞானம்-பெறும் யோக்கியத்தை வளர்த்திடு
அதனில்-விளங்கும் செய்தி-யாவும் ஐயம்-விலக்கும் என்பது
மனதில்-கொண்டு அதனை-நினைத்து அதனின்-பொருளை உணர்ந்திடு
உனது-திறத்தில் என்று-முடியும் முற்றும்-கற்றல் என்பது
ரிஷிகள்-போன்ற மெய்யுணர்வு கொண்ட-ஞானி ஒருவரை
சத்குருவாய்த் தேர்ந்தெடுத்து அவர்க்குச்-சேவை புரிந்திடு
எத்தருணம் அவர்-வாயால் உண்மை-கிடைக்கும் என்றிரு
அத்தகைமை உன்னை-உயர்த்தும் உண்மை-உணர்த்தும் அறிந்திடு

3.5   உண்மை-உணர உன்னை-மறந்து உண்மையோடு கலந்திடு     
உண்மை-உணர உன்னை-மறந்து உண்மையோடு கலந்திடு 
தன்னை-உணரும் நிலையைப்-பெறவே உண்மையாக உழைத்திடு
ஆறு-நூறு ஆனபோதும் சமுத்திரத்தில் கலந்தது
 வேறு-பேரு மறைந்து-பேரு கடல்-எனவே ஆகுது
 
அந்த-பரமன் தன்னிலிருந்து வந்தது-தான் ஜீவனும்
என்ற-உண்மை உணர்ந்த-பிறகு ஜீவன்-பரமனாகுது
இந்த-உண்மை ஞானம்-வந்த பிறகு-அன்றோ கிடைப்பது
அதனைப்-பெறவே உனது-உழைப்பு ஒன்று-தானே உதவுது
 
உலகை-மாயம் என்று-சொல்லல் ஏன்-எதனால் வந்தது
தனதை-மறைத்து உலகைப்-படைத்த இறையே-மாயமாகுது
மனதில்-இதனை உணர-காலம் நிறைய-நிறைய ஆகுது
இதனை-உணர்ந்து கணமும்-இறையை நினைத்து-நீ முயன்றிடு
அறிவு-என்று தினமும்-முயன்று முயன்று-நாமும் வளர்ப்பது
பிறகு-தெரியும் ஞானம்-அல்ல அதற்கு-உதவும் என்பது
எரியும்-விறகைத் தூண்ட-விறகுக் குச்சி-தானே உதவுது
பிறகு-எரியும் நெருப்பில்-அதுவும் கருகித்-தானே போகுது

அறிவும்-ஞானத் தீயை-வளர்க்கப் பயன்படவே செய்யுது
ஞானம்-ஸ்புரிக்க அறிவும்-அதனில் கலந்து-உணர்வு ஆகுது
ஞானம்-என்று சொல்லல்-அறிவு அல்ல-என்று உணர்ந்திடு
ஞானம்-தன்னை உணர்ந்த-மெய்யின் உணர்வு-என்று உணர்ந்திடு
 

3.6  தன்மையற்ற தன்மைத்தான தன்மை-தன்மை துறந்திரு

 *தன்மையற்ற தன்மைத்தான வன்புன்-தன்மை துறந்திரு
உண்மை-உந்தன் தன்மை-யதனை அன்பின்-மூலம் அறிந்திடு
வெண்மை-கொண்ட மனதில்-த்யாகச் சேவை-செய்ய முற்படு
**உண்மையற்ற தீயத்-தன்ன..லத்து-ளோரை விலக்கிடு
 


*தன்மையற்ற-நற்றன்மையற்ற தன்மைத்தான= சுயலநலத்தின் பாற்பட்ட
வன்புன் தன்மை= கொடிய இழிய உணர்வு
**தன்னலத்திலே குறிஎன்று தறிகெட்டிருக்கும் சிறியோரின் சகவாசத்தை விலக்கிடு. உலகின் படைப்புகள் அனைத்தும் இறை உருவு எனினும். அறியாமையால் சிறிதும் பிறர் நலம் நினைக்காமல், சுய நலத்திலும் சுய காரியத்திலும் மட்டுமே குறி-என்று இருப்போரை விலகி இருக்க வேண்டும் என்று கீதையும் சாஸ்திரங்களும் சொல்லுகின்றன. அவர்கள் அறியாமையை நீக்கும் பணி உன்னுடையதன்று. எனவே சத் சங்கத்தில் மட்டுமே இரு. அதற்காக அவர்களை வெறுக்காதே. அசூயை அகற்றி உன்-நோக்கத்தில் முன்னேறு.
 

3.7   உன்னை-உடலென் றெண்ணும்-எண்ணம் தன்னை-நீ துறந்திடு



உன்னை-உடலென் றெண்ணும்-எண்ணம் தன்னை-நீ துறந்திடு
உண்மை-யான நானின்-உணர்வு யாது-என்று அறிந்திட
வெளியில்-அல்ல உள்ளில்-சென்று தேட-முயற்சி செய்திடு
முக்தி-என்ற தன்னுணர்வுத் தன்மையாய் ஆகிடு 

3.8  சாதனையில் வெற்று-வாக்கு வாதம்-தன்னை விடுத்திடு



சாதனையில் வெற்று-வாக்கு வாதம்-தன்னை விடுத்திடு
வேதனையில் படுத்தும் அதனில்-சாரம் இல்லை-அறிந்திடு 
நூதனமாய்ப் பேசும்-பலரின் கூட்டுறவை விட்டிடு 
ஆகமமாய் ஆக்கி-வாழ்வை முன்னேற-நீ முயன்றிடு
 
___________________


Prev    First    Next














 







 

2. ஸ்லோகம் இரண்டு - சத்குருத்வம்


Companionship with the noble ones should be cultivated.
Communion with the Resplendent Lord should be firmly established.
One should discriminate with equanimous Mind.
With determination one should renounce actions (born of desire).
One should associate with noble men of Wisdom.
One should devotedly serve That One every day.
The one immutable Brahman should be the sole enterprise.
One should be receptive to the Supreme scriptural statements with equanimity.
_____________________________
 


ஆன்ம-ஆசை கொண்டவர் கூட-நட்பு கொண்டிரு
 பரமன்-பேரில் ஆசையை வளர்க்க-நீ முயன்றிடு
 மனதை-வென்று அசலன்-என்ற உயர்-நிலைக்கு முயன்றிடு
 புத்தி-சார்-வி..வேகத்தை உன்-துணையாய்க் கொண்டிடு
 வித்திலாதுனைப் படுத்த சத்குருவைத் தெரிந்தெடு
      சத்தியத்தின் உருவத்தை சத்குருவை வணங்கிடு
குருவின்-சொற்கள் குருவின்-செயல்கள் தன்னைக்கூர்ந்து பயன்பெறு
 குருவின்-பதம் கொண்டு-பரம பதத்தை-அடையும் நினைப்பொடு


2.1   ஆன்ம-ஆசை கொண்டவர் கூட-நட்பு கொண்டிரு




ஆன்ம-ஆசை கொண்டவர் கூட-நட்பு கொண்டிரு
ஊன-வாழ்வில் ஞானமே தீர்வு-என்று..ணர்ந்திடு
வீணர்-தன்னின் கூட்டினை விலக்கி-நீ செயல்படு
ஆனை-பலம் ஆன்ம-பலம் விருத்தியாகக் கண்டிடு
உத்த..மத்தின் நெஞ்சுரம் சத்தியத்தி..டத்-திறம்
கொண்டு-என்றும் நற்றடம் தனில்-நிலைக்கும் ஞானியை
கண்டு-சென்று வழிபடு தொண்டு-செய்து வாழ்ந்திடு
நன்று-நன்கு கேட்டிரு அவரின்-கூட்டில் இருந்திடு

உண்மை-தன்னைக் கண்டவர் தன்னைத்-தேடிச் சென்றிடு
அவரின்-உண்மைத் தன்மைஆ.. ராய்ந்து-நீ உணர்ந்திடு
தன்னைக்-கண்ட ஒருவரே உன்னைத்-தேற்றும் தகைமையைக்
கொள்ள-முடியும் என்பதை உணர்ந்து-அவரைத் தேர்ந்தெடு

கண்டிடாத பலர்-கலி தன்னில்-ஆசை காட்டுவர்
விண்டிடாத அவரிடம் யாதும்-உண்டு என்னுவர் 
உண்மை-என்ற இறைவனைக் கூடக்-குறைத்துப் பேசுவர்
தன்மையற்ற ஆணவம் தன்னில்-தன்னைப் போற்றுவர்

உனக்குக்-கதி காட்டுவேன் என்று ஆசை-மூட்டுவார்
தனக்கு-எனக்கு என்றிடும் அவரின்-சொல்லை மீறினால்
அந்த-கதி உனக்கிலை என்றும்-பயம் மூட்டுவார்
இவர்கள்-கவர்ச்சி பேச்சினில் ஞானம்-இல்லை அறிந்திடு

இவரின்-உண்மை தன்மையை அறிந்து-நீ பிழைத்திடு
ஞான-மார்க்க சத்குரு அவர்கள்-இல்லை உணர்ந்திடு
கண்ணிலாத ஒருவனா உனக்குப்-பாதை காட்டுவான்
கவர்ச்சி-கொண்ட பேச்சினால் ஞானப்-பாலா ஊட்டுவான்

உண்மை-தன்னை அறிந்திடும் ஆசை-கொண்டு உழைத்திடு
ஓரடி-நீ எடுத்திடு நூறடி-கொண்..டாண்டவன்
உன்னைத்-தேடி சத்குரு தன்னைத்-தானாய் அனுப்புவான்
அந்த-குரு வேறிலை கடவுள்-என்றே உணருவாய்
உண்மையான சத்குரு தன்னைக்-காணும் வரையில்-நீ
நன்மை-செய்யும் நல்மனம் கொண்டு-உன்னைப் போலவே
உள்ள-மாந்தர் தன்னுடன் சேர்க்கை-கொண்டு வாழுவாய்
எள்ளளவும் தீயவர் சேர்க்கை-தன்னைக் கொண்டிடாய்


2.2   பரமன்-பேரில் ஆசையை வளர்க்க-நீ முயன்றிடு


பரமன்-மீதில் கொண்ட-ஆசை பக்தி-என்றே ஆகுது
விரைவில்-அந்த ஆசை-மற்ற ஆசை-தன்னைக் கொல்லுது
பரமபதம் என்று-மேலோர் அழைக்கும்-இறைவன் திருவடி
கிடைக்க-பக்தி என்னும்-வழி போல-ஒன்று வேறெது

மனிதன்-மனது என்பது *புதிதும்-புதிரும் ஆனது
மனதில்-ஒன்றை நினைத்திட மனிதன்-அதுவாய் ஆவது
**என்பதுப நிஷதத்தின் கூற்றுமாகித் திகழுது
அதனின்படிப் பரமனை நினைக்கப்-ப்ரம்மம் ஆகுது

*மனம் எண்ணங்களின் உருவகமே. புதுப்புது எண்ணங்கள் கணமும் தோன்றி மனதைப் புதிதாகவும் புதிராகவும் இருக்கச் செய்கிறது

* மைத்ரிய உபநிஷத் (V I.43)- மனமே சம்சார சாகரம் என்கிறது.

தொலைவில் உள்ள பொருளையும் அருகிருத்தும் நினைப்புடன்
அலையும்-மனத்தில் கணந்தோறும் பரமன்-நினைப்பை நிறுத்திட
விலையிலா-உ பாயமாய் நல்லோர்-உறவு தன்னையே
கொள்ளவேண்டும் என்று-நம் சங்கரரும் புகல்கிறார்

***தீய-எண்ணம் கொண்டவர் உண்மை-மேன்மை அறிகிலார்
பாயும்-மனதில் கணந்தொறும் தன்னை-மட்டும் எண்ணியே
தீயுமாகும் சுயநலச் சூட்டில்-வெந்து மடிகிறார்
ஆயிரத்தின் பிறப்பிலும் இவர்கள்-தன்னை உணர்ந்திடார்
***( ரிக் வேதம் .IX.73.6). கதோபநிஷத் (I.2.24)

 பரமனடியைக் கண்டிட அதனைக்-கண்ட தூயவர்
ஒருவர்தன்னைத் தேடியே கொள்ள-நீயும் முயலணும்
அருவமான இறைவனைக் கண்ட-குருவை எப்படி
அறிவதென்று நீயுமே அறியும்-திறமை தேடணும்

பரம-குருவின் லக்ஷணம் தன்னை-உணர்தல் சிரமமாம்
அவரின்-நினைப்பு முழுவது பிறரின்-நலனில் இருக்குமாம்
பிறரில்-அந்தப் பரமனை காணும்-முதிர்வு மிளிருமாம்
அவரின்-எளிமை ஒன்றுதான் அவரைக்-காட்டிக் கொடுக்குமாம்

அவர்கள்-மாயக் கடலினைக் கடந்து-நின்றி...ருப்பதால்
அவர்க்கு-பிறர்க்கு கதியினைச் காட்டும்-தகுதி இருக்குமாம்
அர்த்தமற்றக் கவர்ச்சியும் வெற்றுப்-பேச்சுப் புகழ்ச்சியும்
வ்யர்த்தமென்று அவர்பதம் தன்னின்-தூளி உணர்த்துமாம்

உலகமாந்தர் நன்-நலம் தன்னில்-கொண்ட அக்கறை
நிலவுகின்ற உள்ளமே கொண்ட-அவரின் பெருநிலை
தன்னை-பிறர்க்கு ஊட்டியே அவரின்-இதயக் கூட்டிலே
சிறையில்-வாடிச் சிலையென உறையில்-மறையும் வாளென

உறையும்-ஆன்மம் விழித்திட இறையின்-கீதம் மீட்டியே
நிறைவைத்-தரும் சத்குரு மனிதனல்ல இறைவனே..!


2.3  மனதை-வென்று  அசலன்-என்ற உயர்-நிலைக்கு முயன்றிடு


 மனதை-வென்று *அசலன்-என்ற உயர்-நிலைக்கு முயன்றிடு
நகலை-வென்று **அசபை-சென்று அசலைக்-கண்டு உயர்ந்திடு
**சவலை-என்று அழுது-அழுது அன்னை-தாளை சுற்றிடு
***சிவனை-அன்றி எவனுமில்லை எனும்-நிலைக்..குயர்ந்திடு

 *அசலன்= அசலம்(மலை)போன்று அசையாத நிலை கொண்டவன் (ஸ்தித ப்ரக்ஞன்)
**அசபை-யோகங் கொள்ளுங்கால் கேட்கும் நுண்ணிய தெய்வீக ஒலி. அதையும் கடந்து அசலான இறைவனை அடைய வேண்டும்.


**சவலை=சவலைக் குழந்தை தாய்க்கு ஏங்கி ஏங்கி அழுது அழுது அவள் காலடியிலேயே தவமிருப்பது போல் சாதகன் இறை அன்னையை விடாமல் தொந்தரவு செய்ய வேண்டும். அந்த தொந்தரவு ஒன்றுக்கு மட்டுமே ஏங்கித் தவம் கிடக்கும் இறைவனை என்ன சொல்ல !!!
 ***எங்கும் எதிலும் சிவனை (இறைவனை) அன்றி வேறிலை என்றும் சம திருஷ்டி கொள்ளலே சமாதிப் பெருநிலை

மயக்கம் தீர்க்கும் கீதையும் பயப்படாதே என்குது 
மயக்கும் கலக்கும் மாயத்துக்கே பயப்படாதே என்குது
இழையும் குழையும் இன்பத்துக்கே வயப்படாதே என்குது
சுத்தசத்வ ஸ்திரப்-பி.. ரக்ஞை என்னவென்றிட்..டால்-அது
 
இன்பதுன்பம் இரண்டும்-ஒன்று என்பதாக இருப்பது
நண்பர்-பகைவர் என்றிலாத அனைத்தின் ப்ரம்மம் உணர்வது
*வேதக்-கதை உபநிடதம் உடலைத்-தேரு என்குது
புத்தி-என்ற சாரதி மனது-என்ற கயிறினைப்
பூட்டிப்-புலனின் குதிரையைச் செலுத்தல்-யோகம் என்குது
இதைத்தான் கருமப் பாதையாய் கீதபோதம் சொல்லுது
*Katha Upanishad (I.iii.3)
இதனை-இரண்டு போதனை தன்னில்-சுருக்கி அடக்கியே 
அன்பை-உதட்டில் கொண்டிரு சேவை-தன்னைக் கை-எடு 
என்று-சொன்ன உண்மையைக் கண்டு-நாமும் இம்மையில்  
கொள்ளவேண்டும் மேன்மையை வெல்ல-வேண்டும் பிறவியை

ஆசைகொன்று சேவை-தன்னை பூசை-என்று கொண்டிடு 
அந்த-சேவை தன்னை-அன்பு கொண்டு-நீயும் புரிவது
அதனில்-தோன்றும் பலனில்-ஆசை கொள்தல்-தன்னை விலக்குது
இந்த-உண்மை அந்த-உண்மை சொன்ன-கீதை உண்மையாம்
 
இறையை-அறியப் பயன்படும் பக்தி-மார்க்கம் தன்னையே
பக்தி-சூத்ரம் காட்டுது சித்திப்-பாதை காட்டுது
அதனில்-பக்தி என்னது என்ற-விளக்கம் விளங்குது
அதனை-விளக்கல் கடியது அதனை-விளங்கல் இனியது
 
இறைவன்-மீதில் பித்துதான் பக்தி-என்று ஆகுது
இரவும்-பகலும் நினைப்பில்-*நான் ஒன்றுதானே இருக்குது 
இரையைக் காண தவமிரும் கொக்கின்-மதி போன்றது
கரைந்து-மெய்யும் மறைவுற தனை-மறந்த நிலையது
*நான் - உண்மையான தன்னுணர்வு - ஆன்ம உணர்வு
 

2.4   புத்தி-சார்-வி..வேகத்தை உன்-துணையாய்க் கொண்டிடு

 புத்தி-சார்-வி..வேகத்தை உன்-துணையாய்க் கொண்டிடு
வைரம்போல்-ஆ.. காத்தியம் ஆனநல்-வை ராக்கியம்
தன்னிலே நிலைத்திடு உண்மையே நினைத்திடு
இவைகள்-கொண்டு ஆசையின் ஆட்டம்தன்னைப் போக்கிடு  

ஆசைதன்னைக் களைய-நல்ல ஆசை-ஒன்றைத் தெரிந்தெடு
அந்த-ஆசை பரமன்-பேரில் கொள்வதென்று புரிந்திடு
 அந்த-ஆசை கொண்டு-அன்பு சேவை-தன்னைச் செய்திரு
கீதை-கூட இதனை-நல்ல கருமம்-என்றே சொல்லுது

மனது-இரண்டு வகையில்-விளங்கும் புதினமான-புனிதமாம்
ஒன்று-பற்று கொண்டு-ஆசை தன்னில்-கிடந்தது உழலுமாம்
தன்னைக்-கடந்து சித்தம்-என்ற நிலையில்-ஒன்று விளங்குமாம்
தூய-சித்தில் விளங்கும்-யாவும் உண்மையான பொருளுமாம்

சித்தில்-அமைந்த சித்தர்-வாக்கு புதிருமாக-விளங்குமாம்
தூய்மை-கொண்ட சுத்த-சித்தம் அடைய-அதுவும் விளங்குமாம்
அதுவே-சுத்த சத்துவத்தின் நிலைமை-என்று விளங்குமாம்
அதனின்-தன்மை உண்மை-விளங்கும் நன்மை-தன்னை நுகர்வதாம்
அதனில்-நிலைத்த *சோக்கிரதர் சொன்ன-வாக்கு ஒன்றுமாம் 
அறிந்து-கொண்டேன் அறியவில்லை என்ற-உண்மை நன்றுமாய்

*Socrates said once (சுத்த சத்வ நிலை) that 'I know that I know not', he was responding from his conscious awareness of his spiritual mind (supra consciousness)


மனதின்-இயல்பு ஏதாகிலும் ஒன்றைப் பற்றி-அலைவதாம்
ஆதலினால் அதனைப்-பற்றி அறிந்து-கொள்ளல் வேணுமாம்
அதனின்-போக்கில் விடுதல்-போல அதற்கு-போக்கு காட்டுவாய்
அதற்கு-ஆசை கொள்ளச்-சொல்லி ஆசை-தன்னை மூட்டுவாய்

அந்த-ஆசை என்ன-வென்று நினைக்கும்-ஆற்றல்-உனக்குமாய்
கொண்டு-ஆசை தன்னை-பரமன் மீது-கொள்ளச் சொல்லுவாய்
முதலில்-உந்தன் ஆளுகைக்கு அதுவும்-படிய மறுக்குமாம்
திரும்பத்-திரும்ப தற்கு-ஆசை மூட்ட-அதுவும் அடங்குமாம்

ஆசை-கொள்ளல் மனதின்-இயல்பு என்று-ஆன..தாதலால்
ஆசைப்-பாதை தன்னில்-அதுவும் செல்லும்-வேக வேகமாய்
அந்த-ஆசை கோபியர்கள் கொண்ட-கண்ணன் ஆசைபோல்
பந்தமில்லை மாயமில்லை பிறகு-யாவும் ஞானமே

வார்த்தையினால் விளங்கிடாத துரிய-நிலை அந்நிலை
பேச்சினாலே புரிபடாத பைத்தியத்தின் பெருநிலை
மூச்சிலாமல் உயிர்-நடத்தும் சித்-விலாசத்..தின்-நிலை
ஏச்சுக்கஞ்சி..டாதிருக்கும் கோபியரின் உயர்-நிலை

முக்தி-தரும் உண்மை-பக்தி என்னவென்று சொல்லிட
பக்தி-சூத்ரம் கூட-கோபி மங்கையரைக் காட்டுது
எதுவும்-அவன் எதிலும்-அவன் என்று-அவர்கள் கண்ணனை
மனதில்-கொண்டு அவனில்-கரைந்து விடுதல்-ஒன்றே பக்தியாம்
 

2.5   வித்திலாது..னைப்-படுத்த சத்குருவைத் தெரிந்தெடு   

வித்திலாதுனைப் படுத்த சத்குருவைத் தெரிந்தெடு
கத்தி-போல புத்தி-கூர்மை கொண்ட-ஞானப் பார்வையும் 
சுத்தி-போல சத்தின்-ஆணி உள்ளிரக்கும் தீர்மையும்
சத்தியத்தி..லே-நிலைத்து அதனைக் காட்டும் நேர்மையும்
நித்தியத்து..னைபடுத்து கின்ற-தானத் திறமையும்
 கொண்டதான ஒருவர்-தன்னை சத்குருவாய் அடைந்திடு
பிறரைக்-காண உனக்கு-கண்கள் உதவும்-எனினும் உன்னை-நீ 
காண-வேண்டும் பளிங்கு-போல விளங்குமோர்-கண்..ணாடி-போல்
உன்னைக்-காண உதவத்-தன்னைக் கண்ட-ஒருவர் வேண்டுமே
உன்னைத்-தகுந்த பாதை-காட்டி இட்டுச்-செல்லும் குருவுமாய்
ஆதி-சங்க..ரர்-தரும் குருவின்-லக்ஷ..ணம்-இதோ..!
பிறருக்காக வாழுவார் அவருக்கென்றால் நாணுவார்
(உன்) வரவுக்காக ஏங்குவார் உண்மைப்-பாலை ஊட்டுவார் 
ஆசை-விட்ட யோகியாம் அமைதி-கண்ட ஞானியாம்
“என்னை”-இன்றி எரியும்-ஞானத் தீயைக்-கொண்டு விளங்குவார்
நல்லோர்-அவரின் நண்பராம் அவரில்-எளிமை துலங்குமாம்
*விதியை-மாற்றி கதியை-அளிக்க அவரின்-சொல்லும் ஒலிக்குமாம்
*கதி தர வாஞ்சையுடன் அழைக்கும் அவர் சொல்லில் கதியிலை எனும் அமங்கலம் எந்நாளும் விளங்காது. 
Sadhguru is one who is full of positive vibration.He gives you abundant confidence. He is one whose life will be an example of this.
“என்னை”இன்றி -தன்னலம் இன்றி


நசிகேதன் என்ற-சிறுவன் சொன்னதாகச் சொல்வது
உபநிடதம் தன்னில்-வரும் இதனை-நினைத்தல் பொருந்துது
ஐயே..ஐயோ..! என்னை-யறிதல் எனக்கு-மிகவும் அரியது
விதியைக்-கணிக்கும் யமனே-உனக்கு தருமம்-என்றும் உரியது  
எனவே-எனக்கு குருவே-நீயும் உண்மை-தன்னை உரைக்கணும்
அதுவே-எனக்கு இறைவா-நீயும் கொடுக்கலாகும் நல்-வரம்
தருமத்திரு உருவகமாம் யமனை-இறைவன் என்பது 
மிகையுமல்ல தவறுமல்ல சிறுவன்-அறிவு பெரியது 
 குருவுமாக விளங்க-ஒருவர் வேண்டும்-தகைமை பெரியது 
அருவமாக விளங்கும்-இறைவன் உருவம்-குருவும் ஆகுது

2.6   சத்தியத்தின் உருவம்-தன்னை சத்குருவாய் வணங்கிடு



சத்தியத்தின் உருவம்-தன்னை சத்குருவாய் வணங்கிடு 
*வித்திசையை மூச்சிசைக்கும் அவரைத்-தொழுது அழுதிடு 
எத்திசையும் புகழ்-மணக்கும் அவர்க்குச்-சேவை புரிந்திடு
**மத்தசைக்கும் தேவர்-பணியும் அவரைப்-பணிந்து உயர்ந்திடு
*வித்திசை-அனைத்துக்கும் வித்தான இசை – ப்ரணவம்
அதுவே தன் ஸ்வாசக் காற்றாய் ஒலிக்கக் கொண்டவர் சத்குரு/இறைவன்
**மந்தர மலை மத்தசைத்து அமுதம் எடுக்க/எடுத்த தேவர்கள் பணியும் சிவனை (தக்ஷிணா மூர்த்தியை-தருமூர்த்த சத்குருவை) , கண்ணனை (கீதாச்சார்ய கோவிந்தனை) குருவாக எண்ணிப் பணிந்திடு. இறைவன் வடிவே சத்குரு என்பதே துணிபு.

2.7   குருவின்-சொற்கள் குருவின்-செயல்கள் தன்னைக்-கூர்ந்து பயன்-பெறு


குருவின்-சொற்கள் குருவின்-செயல்கள் தன்னைக்கூர்ந்து பயன்பெறு
கேட்கக்-காண மட்டுமல்ல வாழ்வில்-நடக்க முயன்றிடு
சிவனின்-ரூபம் கொண்ட-சக்தி அவரின்-வாழ்வு போதனை 
தன்னை-உணர்ந்து செயலில்-கொள்ள தீரும்-பிறவி-வேதனை 
என்ற-உண்மை உணர-தாகம் தந்த-வேகம் கொண்ட-நல்
*சீடனாகச்-செய்தெழுவாய் சேவை-அன்றிப் பயனிலை
உண்மையான சீடனாக எப்படிச் செயல் படவேண்டும் / கூடாது என விளக்கும் இந்த வரிக்கு. கீழ்கண்ட மூன்று விளக்கங்கள் உள்ளன.
Interpretation :1
*நல் *சீடனாகச்-செய்தெழுவாய் சேவை-அன்றிப் பயனிலை :
உணமையான நல்ல சீடனாய் குருவின் வாழ்வே செய்தி என்றுணர்ந்து அதை நடைமுறையில் கொண்டு வந்து குரு மற்றும் லோக சேவையில் ஈடுபட்டு வாழ்தல் அன்றிக் கேட்டலில் பயனில்லை
Interpretation :2
*நல் *சீடனாகச்-செய்தெழு வாய் சேவை-அன்றிப் பயனிலை
*நல் *சீடனாகச்-செய்தெழு – உணமையான நல்ல சீடனாய் குருவின் வாழ்வே செய்தி என்றுணர்ந்து அதை நடைமுறையில் கொண்டு வந்து செயல் படு.
வாய் சேவை+அன்று+இப்பயன்+இல்லை : புகழ்ச்சி சொற்களால் +இப்பிறவி முடிந்து அடுத்து என்ன என்று நிற்கும் மறுமைப் பேறுக்கு நிற்கும் நாளில்+வெற்றுப் புகழ்சித் தோத்திரத்தால் பூவுலகில் கிடைக்கும் இப்பயன் (transcient) + இல்லை
Interpretation :3
தமிழ் இலக்கணப்படி ஒரு செயலை செய்யும் பொருள் எழுவாயென்றும், செயலைச் சொல்லும் வினைமுற்று பயனிலையென்றும், எழுவாயினால் செய்யப்படுகின்ற பொருளே செயபடுபொருள் என்றும் வழங்கப்படும்.
" ஸ்ரீதரன் புத்தகத்தைப் படித்தான்", இச்சொற்டொரரில்;
ஸ்ரீதரன் – எழுவாய் , படித்தான் – பயனிலை, புத்தகத்தை –செயபடுபொருள்
இதன்படி,
சீடனாகச்-செய்தெழுவாய் சேவை-அன்றிப் பயனிலை –
என்பதில் சீடன்-எழுவாய், புரிவது-பயனிலை சேவை – செயபடுபொருள்
இவ்வாறு ஸ்ரத்தையாக குருவின் உபதேசப்படி ஒரு சீடன் செய்தொழுகுங்கால் , இந்த சேவை புரிதல் என்பது
அன்றி பயனிலை  =அன்று+இப்பயனிலை
அன்று (மறுமையில்) , இப்பயனிலை ஆகிறது - உண்மையான வினைமுற்று என்னும் இப்பயனிலை ஆகிறது.
 
குருவின்-பதம் கொண்டு-பரம பதத்தை-அடையும் நினைப்பொடு
 அருவில்-இரும் பரமன்-தனை உருவில்-முதலில் வழிபடு
 உறவில்-அவன் உனது-என்ற உண்மை-தன்னின் நினைப்பொடு
 விரைவில்-தோன்றும் இறைவன்-காட்சி தன்னை-எண்ணி வாழ்ந்திரு
 

2.8   ஞானம்-தன்னை ஏற்க-நல்ல பாத்திரமாய் மாறிடு


ஞானம்-தன்னை ஏற்க-நல்ல பாத்திரமாய் மாறிடு 
வேதம்-கூறும் உண்மை-தன்னின் உண்மை-தன்னை நம்பிடு
மகரிஷிகள் உலகம்-தந்த வேதம்-அவர்க்கு உண்மையை
நிஜவுருவாய் காட்டியதால் அதை-நமக்கு அன்புடன் 
அளித்திடவே கருணை-கொண்டார் அவர்கள்பரமம் தன்னைக்கண்டார்
ஞானம்-ஏற்கும் பாத்திரமா ? என்னதது என்றொரு
சின்ன-கேள்வி சீடன்-மனதில் தோன்றித்-தானே மயக்குது
தூய-நீரே சிப்பிக்குள்ளே முத்துமாகி ஜொலிக்குது
என்றிட்டாலும் அதற்கு-பல விதி-முறைகள் இருக்குது

அதனைப்-போலே முத்தைத்-தாங்கும் தகுதி-நீயும் வளர்க்கணும்
ஞானம்-விளங்க உனது-சித்தம் நிர்மலமாய் ஆகணும் 
உனக்கு-என்று ஒன்று-இல்லை என்ற-நிலையைக் கொண்டிடு
முனிகள்-சொன்ன வேதக்-கருத்தை ஐயுறாமல் ஏற்றிடு
பிறகு-உனது பாரம்-நிறையக் குறைய-நீயும் உணர்ந்திடு
சிறகு-முளைத்த பறவை-போல மனதின்-வானில் பறந்திடு


Prev    First  Next
_________________